Event Details

தூய நெஞ்சக் கல்லூரியில் உள்ள தமிழ்த்துறை வீரமாமுனிவர் தமிழ் மன்றம் சார்பாகத் தமிழ் மன்ற உறுப்பினர்கள் 65 பேர் ஏலகிரிமலைக்குத் தொல்லியல் சார்ந்த இடங்களை காண அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியைக் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை முனைவர் தா. மரிய அந்தோணிராஜ் அடிகளார் தொடங்கி வைத்தார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கி. பார்த்திபராஜா வாழ்த்தி வழிஅனுப்பி வைத்தார்.

          தமிழ் மன்றத் தலைவர் முனைவர் . மோகன் காந்தி, முனைவர் ஷைலஜா ஆகியோர் ஒருங்கிணைப்பில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் இருந்து ஏலகிரிமலைக்குத் தமிழ் மன்ற உறுப்பினர்கள் 65 பேரை அழைத்துச் சென்று, தொல்லியல் கற்றலுக்காகக் களப்பயணத்தை மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்குத் தொல்லியல் உலா எனப் பெயர் சூட்டப் பெற்றுள்ளது. ஏலகிரிமலையிலுள்ள அத்தனாவூரில் அருவி தங்கும் விடுதியிலுள்ள புலிக்குத்திப்பட்டான் நடுகல், அத்தனாவூர் மாரியம்மன் கோயிலுக்கு அருகே உள்ள செக்குக் கல்வெட்டு, பெருமாளப்பன் கோயில் கற்கோடாரிகள், மங்களம் கிராமத்திலுள்ள பள்ளிக் கூடத்து. ராமசாமி நிலத்திலுள்ள திருப்பத்தூர் பெயர் பொறிக்கப் பெற்ற பல்லவர் கால நடுகல், மேலும் அங்குள்ள பாறை நடுகல், உடன் கட்டை நடுகல், ஆஞ்சநேயர் சிற்பம் ஆகியவற்றை பார்வையிட்டனர். இறுதியாக நிலாவூரில் உள்ள மூன்று பல்லவர் கால நடுகற்கள் குறித்த விளக்கங்களைக் . மோகன் காந்தி கூறினார். இக்கள ஆய்வினால் பல தொல்லியல் சார்ந்த அறிவை மாணவ, மாணவியர் பெற்றனர்.