Event Details

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் மனித உரிமை மீறலைக் கண்டித்தும் அங்குப் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும்  திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி கல்லூரி வளாகத்தில் அமைதி ஒருமைப்பாட்டுக் கூட்டம் நடைபெற்றது. 
இந்நிகழ்வில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், மாணவர்கள்; குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இங்கு வந்து பயிலும் மாணவர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கி. பார்த்திபராஜா மணிப்பூரில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். 
மணிப்பூரில் இருந்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் படித்த மாணவர் பெஞ்சமின் பேசுகையில் அங்கு பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களில் என் குடும்பமும் ஒன்று. கடந்த மே மாதம் இறுதித் தேர்வு முடிந்தும் என்னால் எங்கள் மாநிலத்திற்குச் செல்ல முடியாத நிலை அங்கு நிலவுகின்றது. வன்முறையையும் மனித உரிமை மீறலையும் எங்கள் மாநில மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. விரைவில் எம் மாநில மக்களுக்கு நீதியும் அமைதியும் கிடைக்க வேண்டும் என்று பேசினார். தொடர்ந்து ஒற்றுமை அமைதிக்கான உறுதிமொழியினை மாணவர்களும் பேராசிரியர்களும் எடுத்துக் கொண்டனர்.
பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களுக்குக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக ரூபாய் 2,00,000/- இரண்டு லட்சம் நிவாரண உதவியாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. 
இந்நிகழ்வில் கல்லூரிச் செயலர், கல்லூரிமுதல்வர்,கூடுதல் முதல்வர், துணை முதல்வர்கள் உள்ளிட்ட கல்லூரி நிர்வாகத்தினர் முன்னிலை வகித்தனர்.