Event Details

 

தமிழ்த்துறையில் ஆய்வுக்கட்டுரை எழுதும் நெறிமுறைகள் குறித்த ஒருநாள் பயிலரங்கம்   

 

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறையில் ஆய்வுக்கட்டுரை எழுதும் நெறிமுறைகள் குறித்த ஒருநாள் பயிலரங்கம் 25.02.2020 அன்று நடைபெற்றது. 

அண்மையில் விக்கிபீடியா தளம் இந்திய அளவில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் போட்டியினை நடத்தியது. இதில் ஏனைய இந்திய இந்திய மொழிகளைக் காட்டிலும் அதிகப்படியான கட்டுரைகளைப் பதிவேற்றித் தமிழ் முதல் இடம் பிடித்தது.
இந்நிலையில் ஆய்வுக்கட்டுரை எழுதுவதன் அடிப்படைகளை மாணவர்களும் ஆய்வாளர்களும் அறியும் பொருட்டு இப்பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்பயிரங்கில் கல்லூரி முதல்வர் அருட்திரு முனைவர் த.மரிய அந்தோனிராஜ் அவர்களும் செயலர் அருட்திரு முனைவர் சி.அந்தோணிராஜ், கூடுதல் முதல்வர் அருட்திரு முனைவர் கே.ஏ. மரிய ஆரோக்கியராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். திருப்பத்தூர் கம்பன் கழகச் செயலாளர் முனைவர் இரத்தின நடராசன் அவர்கள் வாழ்த்துறை வழங்கினார்.


புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் முன்னாள் பேராசிரியர் முனைவர் க.பஞ்சாங்கம், ஆந்திர மாநிலம் குப்பம் திராவிடப் பல்கலைக் கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் இரா.விவேகானந்த கோபால், சென்னைக் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சு.சதாசிவம், திருவள்ளுவர் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ந.செயராமன் ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வாளர்களுக்குப் பயிற்சியளித்தனர்.

இப்பயிலரங்கினை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பொன்.செல்வகுமார் மற்றும் முனைவர் ஆ.சந்திரன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.


இதில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள்
கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர்.