Event Details

பாரம்பரிய மரபு மீட்புத் திருவிழா-2019

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மற்றும் பசுமைக்கூடு சூழலியல் அமைப்பு இணைந்து நடத்தும் “பாரம்பரிய மரபு மீட்புத் திருவிழா-2019” 17.02.2019 அன்று கரேஞோ அரங்கில் நடைபெறவுள்ளது. இவ்விழாவானது திருப்பத்தூர் வட்டார விவசாயிகளைத் தமிழர் போற்றிய மரபு விவசாயத்தின் மேன்மைகளைகளையும் இன்றைக்கு அதற்கான தேவைகளையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. விழாவன்று மரபு விதைகள் கண்காட்சி, நாட்டு மூலிகைகள் கண்காட்சி, பாரம்பரிய சிறுதானிய உணவுகள் கண்காட்சி, வேளாண் இயற்கை இடுபொருட்கள் செய்முறை, இயற்கை ஆர்வலர்களின் அனுபவப் பகிர்வு நடைபெற உள்ளன.

இந்நிகழ்வை தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு மற்றும் முனைவர் சு.சிவசந்திரகுமார் ஏற்பாடு செய்கின்றனர்.

 
 
 

Click Here to Download the following file(s):

Invitation - Front