Event Details

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறையும் கோயம்புத்தூர் யாக்கை மரபு அறக்கட்டளையும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தந்தம் மேற்கொண்டுள்ளது. அதன் முதல் நிகழ்வாக ஒரு நாள் தொல்லியல் கண்காட்சியும் கருத்தமர்வுகளும் 30.01.2024 அன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் வட தமிழகமும் தொல்லியலும் என்னும் தலைப்பில் இவ்வட்டாரத் தொல்லியல் அடையாளங்களை முனைவர் . பிரபு, முனைவர் G. மோகன் காந்தி மற்றும் யாக்கை அறக்கட்டளை ஆகியோர் இணைந்து கண்காட்சியாக மாணவர்களுக்கு வழங்கினர். மேலும் வட தமிழகம் தொல்லியலும் என்ற பொருண்மையில் இரண்டு கருத்தமர்வுகள் சிறப்பாக நடைபெற்றன. முதல் அமர்வில் மேனாள் வேலூர் அருங்காட்சியகக் காப்பாளர் முனைவர் காந்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்.  அமர்வு இரண்டில் பழங்காலத் தொல்லியல் மற்றும் வரலாறு குறித்து இந்து சமய அறநிலைத்துறை பொறுப்பு அலுவலர் முனைவர் இரா. சேகர் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வில் பிரிவு-1 மற்றும் பிரிவு-2 தமிழ்த்துறை, வரலாற்றுத்துறை மற்றும் பிறதுறை மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டு, கருத்தமர்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வினை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் . பிரபு ஏற்பாடு செய்திருந்தார்.